May 23, 2025 5:47:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை தொடர்பான அறிவித்தல்!

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பினூடாக அல்லது ஏனைய சட்டங்களின் ஊடாக கட்டாய ஓய்விற்கான வயதெல்லை குறிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.