March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள்!

இலங்கை முழுவதும் போசாக்கு குறைப்பாட்டுடன் 30,000 சிறுவர்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அந்த சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் உடாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுவர்களுக்காக போஷாக்கு உணவு அடங்கிய பொதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது