
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம – பொந்துபிட்டிய பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கையடக்க தொலைபேசிகள், தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வெலிப்பென்ன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து