March 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்வெட்டுக் காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காக தேவையான நீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு அந்த சபை நீர் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதான நீர்விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.