
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க மின்சார சபை தயாராகி வருகின்றது.
இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் தற்போதைய நிலைமையில் மின்சார சபையின் இந்த தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதமாளவில் மீண்டுமொரு மின்சார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
டொலர் நெருக்கடியால் எரிபொருள் கொள்வனவில் ஏற்படக் கூடிய பாதிப்பு, வரட்சியால் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறைதல் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்படலாம் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, 2 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை மேலும் 2 நாட்களுக்கு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியதான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.