January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – சென்னை விமான சேவைகள் டிசம்பர் 12 முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சென்னை – கொழும்பு இடையே இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையம் 2020 மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கிருந்து விமான சேவைகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் இம்மாதத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான விமான பயண சீட்டுக்கள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.