January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை”

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.