January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சையில் தோற்ற 80 வீத வருகை அவசியம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் இது தொடர்பான சுற்றறிக்கையை  மீண்டும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 வருகை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத வருகை கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் அடிக்கடி பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டமையினால் 2021 முதல் அந்த சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.