January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் நிகழ்வுகள்: ஜனாதிபதிக்கு நன்றி கூறும் தமிழ்க் கூட்டமைப்பு!

வடக்கு, கிழக்கில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடி கொடுக்காமையை ஜனாதிபதியின் நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாக அமைந்துள்ளது என்று என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனே இதனை கூறியுள்ளார்.

சில இடங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடிகள் கொடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.