மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகளை 5 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் காரணமாகவே குறித்த ரயில் சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.