January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது தீரும்?

நாட்டில் பல பிரதேசங்களிலும் சமையல் எரிவாயுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் குறைந்தளவிலேயே விநியோகிக்கப்படுகின்றன.

இதனாலேயே அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், 4,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக அதன்பின்னர் அதிகளவில் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியுமென்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

-(3)