தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 13 ஆவது அரசியலைமைப்பு திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வை மேற்கொள்வதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதி கோரியிருந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாங்கள் எப்போதும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், இந்த விடயத்தில் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாது தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பிளவுப்படாத நாட்டுக்குள், ஒருமைப்பாட்டை பாதுகாத்து அதனை முன்னெடுக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துளள்ளார்.