பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படத்தும் வரையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு போகமாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில், தேர்தலுக்கு செல்ல முடியாது. இதனால் இப்போதைக்கு பாராளுமன்றம் கலைக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் இனி எந்தவொரு போராட்டத்திற்கும் இடமளிக்கப்படாது என்றும், அவ்வாறு நடத்தினால் இராணுவம் மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்றும் அதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.