தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், டிசம்பரில் அந்த கலந்துரையாடலை நடத்தலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஒவ்வொரு கட்சியிடமும் நேரடியாக ஜனாதிபதி நிலைப்பாட்டைக் கோரினார்.
இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்ககள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் அதற்கு இணங்குவதாக தெரிவித்தனர்.
இதன்படி வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி நிறைவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசுவோம் என்று ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் லக்ஷமன் கிரியெல்ல நிலைப்பாட்டை கோரிய போது, அதற்கு தாம் இணங்குவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.