
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் காலமானார்.
கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று தனது 79 ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார்.
1994 முதல் 2015 வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த முத்து சிவலிங்கம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.