தான் காணி மோசடியில் ஈடுபட்டிருந்தால் உடனடியாக குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊழல் மோசடிகளை கண்டறியவும் விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
சாணக்கியன் அதன்போது தெரிவித்துள்ளதாவது,
”காணி அபகரிப்பு பற்றி ஒருவிடயம் தொடர்பில் பிள்ளையான் சொல்லியிருந்தார் என்னுடைய பெயரினை பயன்படுத்தி. காணி அபகரிப்பினை பற்றி ஏதேனும் இருந்தால் நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். குழு ஒன்றினை நியமித்து நான் என்னிடமுள்ள ஆவணங்களை கையளிக்கின்றேன். அதனை ஆராயுங்கள்.
அதேபோன்று சிவநேசதுரை சந்திரகாந்தனுடைய ஆவணங்களையும் தருகின்றேன் அதனையும் நீங்கள் விசாரியுங்கள்.
இதேவேளை, நான் கனடாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். கனடாவிற்கு விசா எடுத்து எப்படி போவது என்று தெரியாது என்பதனை அவர் நிருபித்துள்ளார். கனடாவிற்கு ஆட்களை கடத்தி காசு உழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆனால் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் என அழைக்கப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன” என்றார்.