
2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 15 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு, இன்று மாலை அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உள்ளிட்ட 121 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் குழுக்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன.
இதன்படி எதிராக 84 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. விக்னேஸ்வரன் நடு நிலையாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்த்தும் வாக்களித்தனர்.
இன்றை வாக்களிப்பை தொடர்ந்து நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் நடைபெற்று 8 ஆம் திகதி மாலை இறுதி வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.