File Photo
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலைகளின் ஆசிரியைகள் சாரிக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
இதன்படி நேற்றைய தினம் அசிரியர்கள் பலர் நேற்று வேறு ஆடைகளில் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பொருத்தமான எந்த உடையிலும் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
.