
விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மாதத்தின் முதலாம் திகதியும், 15 ஆம் திகதியும் விலை மறுசீரமைப்பு செய்யப்படுகின்றது.
ஆனால் இனிவரும் மாதங்களில் மாதத்தில் ஒருதடவை மாத்திரம் அதில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.