
File Photo
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வது இலகுவானது அல்ல. இதனால் கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது என அதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எடுக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு நன்மையானதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.