March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரேண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு: மன்ன கண்ணா காயம்!

File Photo

கொழும்பு, கிரேண்ட்பாஸ் – நவகம்புர பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மன்ன கண்ணா என்றழைக்கப்படும் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் குற்றக் கும்பலொன்றை சேர்ந்தவர் என்றும், இவர் கஞ்சிபான இம்ரானின் தந்தை மீதான தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் என்றும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.