
அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணை கோரி இரண்டாவது தடவையாக முன்வைக்கப்பட்டிருந்த மனு இன்று சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரை நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றிருந்த போது, அந்த அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க, ‘டேட்டிங்’ செயலி மூலம் பெண்ணொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்தப் பெண்ணை சந்தித்த போது அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்ககப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 29 வயதுடைய பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவர் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.