
நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவாக அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.