
இலங்கையில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோர் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் (என்.வி.கியூவ்) மற்றும் 45 நாட்கள் பயிற்சியை பெற்றிருப்பதை கட்டாயமாக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2023 ஏப்ரல் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பணிப்பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.