
2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை குறித்த தினத்தில் நடத்துவதற்கு தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தம்மிடம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் மாதம் 20ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது குழுவினால் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.