
4 இலட்சம் கிலோ பால்மா உள்ளடக்கிய 17 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக தேங்கியுள்ளதாகவும், இதனால் நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்கலன்களில் உள்ள பால்மாவை வெளியே கொண்டு வருவதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில், வெளிநாட்டில் இருந்து பால்மாவை விநியோகிக்கும் முகவர்கள் இந்தப் பால் மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கோருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் இலங்கையில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.