
நாடு முழுவதும் கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் தினங்களில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படலாம் என்று அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஹோட்டல் ஊழியர்கள் பலர் வேலையிழக்க நேரிடும் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முட்டை பற்றாக்குறையால் கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தயாரிப்பு பல ஹோட்டல்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால் நாடு முழுவதும் ஹோட்டல்களை மூட வேண்டி வரலாம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.