March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேரும் பிணையில் விடுவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஐநா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்ட போது, ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் நேற்று கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது இவர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் சந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.