March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலை நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு சென்ற எதிர்க்கட்சிகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்திற்குள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாஸ தலைமையில் இந்தக் குழுவினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று தமது கோரிக்கை கடிதத்தை கையளித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரான அரசாங்கத்தில் இருந்து விலகிய ஜீ.எல்.பீரிஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர, வீரவன்ச அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவருடன் அங்கு சென்றுள்ளனர்.

மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தேர்தலை ஒத்தி வைக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.