அரசாங்கம் தமிழ் மக்களை ஒருபோதும் புறக்கணிக்காது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தவராசா கலையரசன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பிரச்சனைகள் தொடர்பிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலையரசரன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடவோ, புறக்கணிக்கவோ மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப் பொருள் பிரச்சனை தொடர்பில் மாகாண ஆளுநர் தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.