சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டள்ளன.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சிறுவர்கள் தமது பிரச்சனைகளை 1929 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாக முன்வைக்க முடியும். 24 மணி நேரமும் இந்த தொலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்கள் தமது பிரச்சனைகளை 1938 என்ற இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும். இந்த இலக்கம் முற்பகல் 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் செயற்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த தொலைபேசி இலங்களின் ஊடாக முறைப்பாடுகளை செய்ய முடியும் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.