2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதியினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இலங்கை கடந்த ஒருவருட காலமாக கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதால், இது தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரித் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை வெளிநாட்டு கடன்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி அறிவித்தல்களை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதையொட்டி பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.