வியட்நாம் கடற்பரப்பில் அகதிகள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது அவர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களிடையே 264 ஆண்களும், 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்கலாக 303 பேர் உள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கப்பலில் இருந்து மீட்கப்பட்டு நாடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் விரும்பும் நாட்டில் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐநா அகதிகளுக்கான நிறுவனத்தை கேட்டுக்கொள்வதாக சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.