January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்!

Photo: SocialMedia

சிங்கப்பூர் கடற்படையினரால் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வியட்நாம் – பிலிப்பைன்ஸ் இடையே இவர்கள் பயணித்த கப்பல் சூறாவளியில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியிருந்தது.

இதன்போது, குறித்த கப்பலில் இருந்த ஒருவர், இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரிய நிலையிலேயே சிங்கப்பூர் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் இருந்து வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்கில் பயணித்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இவர்களை, வியட்நாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.