May 29, 2025 17:37:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”டீசல், மண்ணெண்ணெய்யால் அரசாங்கத்திற்கு நஷ்டம்”

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் அரசாங்கம் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எரிபொருள் விலைக்கு அமைய, ஒரு லீட்டர் டீசலில் 12 ரூபாவும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயில் 22 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டில் விலைகள் அதிகரிக்கப்படாமல் நுகர்வோருக்கு குறைந்த விலையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.