
File Photo
மூழ்கும் நிலையில் இருந்த கப்பலொன்றில் இருந்து இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் 305 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியட்நாம் – பிலிப்பைன்ஸ் இடையே சூறாவளியில் சிக்கி இவர்கள் பயணித்த கப்பல் விபத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்தக் கப்பலில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலில் இருந்த ஒருவர், இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரிய நிலையிலேயே சிங்கப்பூர் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்கில் பயணித்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இவர்கள், வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.