நவம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ கிராம் நிறை சிலிண்டர் 30 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் நிறை சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை அதிகரிப்புக்கமைய சந்தையில் 12. கிலா நிறையுடைய சிலிண்டர் 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.