Photo: Social Media
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘டேட்டிங்’ செயலி மூலம் குறித்த பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்தப் பெண்ணை சந்தித்த போது அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்ககப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 29 வயதுடைய பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவர் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
சந்தேக நபரான தனுஷ்க குணதிலக, அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
இவர் இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்படுமாக இருந்தால், இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளார்.