April 10, 2025 23:46:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்ட நிலையில், அவர் இன்று கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சென்றதாக கூறப்படுகின்றது.

இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.