April 21, 2025 16:54:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக மதுபான பாவனை பட்டியலில் இலங்கை வீழ்ச்சி!

உலக மதுபான பாவனை அதிகளவில் உள்ள நாடுகளின் வரிசை பட்டியலில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்து.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடியால் மதுபாவனை வேகமாக குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மதுபான உற்பத்தியும் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அவற்றின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.