May 3, 2025 2:36:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் குரங்கு அம்மை தொற்றுடன் ஒருவர் அடையாளம்!

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நவம்பர் முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பியிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய நிணநீர் முனைகள் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 வயதுடைய குறித்த நபர் தற்போது கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.