சுற்றுலா வீசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு போக வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறாக சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்கள் பலர், அங்கு நிர்க்கதி நிலையில் இருப்பதாகவும், இதனால் எந்தவொரு நாட்டுக்கும் அவ்வாறு சென்று சிக்கல்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.