வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் பரப்பில் ‘சபாரி’ சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கே வர வேண்டியுள்ளது.
இதனால் அந்த மாகாணத்தில் சரணாலயத்தை அமைப்பதற்கான இடங்கள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கோரிக்கைக்கு அமைய, அங்கு பொருத்தமான காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்