June 15, 2025 13:00:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசந்த முதலிகேவுக்கு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை!

File Photo

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சிகிச்சையொன்றுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தோல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.