ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய ரிஷாட் பதியுதீனை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்புகளை பேணியதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாட் பதியூதின் பல மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று வழக்கில் இருந்து முழுமையாக விடுதலையாகியுள்ளார்.