March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தை கண்டித்து கொழும்பில் இன்று போராட்டம்!

File Photo

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தப் பேரணியில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

பிற்பகல் 3 மணியளவில் மருதானை பகுதியில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரையில் இந்தப் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பேரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மைத்திரிபால சிறிசேன தலைமையீலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளும், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது.

எனினும் ஜே.வி.பி இந்தப் போராட்டத்தை ஆதரிக்காது என்று அறிவித்துள்ளது.