களுத்துறை மாவட்டத்திலுள்ள குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளதால், தென்மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வினாடிக்கு சுமார் 500 கனமீட்டர் அளவுக்கு பெரிய அளவிலான நீரோட்டம் பாய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் புளத்சிங்கல, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.