கோதுமை மா விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஹோட்டல்களில் உணவுப் பொருட்களில் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 4 வகையான உணவுகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பரோட்டா ரொட்டி, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேநீரின் விலையும் 30 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.