November 27, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேக்கரி உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு!

கோதுமை மா விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் மற்றைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் குறைப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.