பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
நிறைவேற்றப்பட்ட திருத்தத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டதை தொடர்ந்து அது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது திருத்தம் ஒக்டோபர் 21 ஆம் திகதி மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதனை 21 ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை புதிய திருத்தத்திற்கமைய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது.
இதன்படி இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாராளுமன்றத்தில் இருக்கின்றனரா என்பது தொடர்பான விசாரணைகள் இன்றுடன் முடிவடையவுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறித்த விசாரணையை முன்னெடுத்திருந்தது.
இதற்கமைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்த வாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணை முடிவுகள் இன்று பாராளுமன்றத்திறற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.